திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் உட்பட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.1,427 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. குறிப்பாக, மணல் எடுத்துச் செல்வதற்கான அனுமதி சீட்டுகளை போலியாக தயாரித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை (FIR) தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.