1969 முதல் கருணாநிதி அமைச்சரவையில் அவரே நிதித்துறையையும் வகித்து வந்தார். 1977-ல் முதல் எம்ஜிஆர் அமைச்சரவையில் நாஞ்சில் மனோகரன் நிதியமைச்சராக இருந்தார். எம்ஜிஆரின் 2வது, 3வது அமைச்சரவையில் நெடுஞ்செழியன் நிதியமைச்சராக இருந்தார். 1991-ல் முதல் ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்செழியனும், 2001-ல் முதல் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் பொன்னையனும் நிதியமைச்சராக இருந்துள்ளனர். 2017 பழனிசாமி அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வமும், 2021 மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோர் இருந்துள்ளனர்.