2026-27ஆம் ஆண்டுக்கான திருத்திய வரவு செலவு கணக்குகளை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். பேரவையில் இன்று உரையாற்றிய அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம். இந்த மேலான சமத்துவ கோட்பாடுகளுடன் ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் முதலமைச்சர் மகனாக, சகோதரனாக வாழ்ந்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, ஊழலற்ற நேர்மையான அரசாக இந்த ஆட்சி உள்ளது என்று கூறினார்.