இந்தியாவில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு வரும் 26, 27 தேதிகளில் தமிழகம் வந்து, அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.