பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்வில் நடிகை ரித்விகா கலந்துகொண்டு பேசினார். படங்கள் தியேட்டருக்கா அல்லது ஓடிடிக்கா என்று பிரித்து பார்க்கும் புதிய கலாசாரம் தற்போது சினிமாவில் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், அனைத்து படங்களையும் திரையரங்குகளில் பார்ப்பதே சினிமாவுக்கு நல்லது என்று வலியுறுத்தினார். மேலும், இப்படத்தின் கதை பிடித்திருந்ததால் முதல்முறையாக எதிர்மறை கதாபாத்திரத்தில் விரும்பி நடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.