தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச் 30) காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. இன்று மற்றும் ஏப்ரல் 2, ஏப்ரல் 4, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.