மணிப்பூர், ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் குகி ஆயுதக் குழுவினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது. பாதுகாப்புப் படையினருடனான மோதலில் குகி ஆயுதக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.