சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் நைஜீரியாவின் இக்போ ஓரா நகரில், இரட்டையர்கள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இசை, நடனம், ஊர்வலம் என்று களைகட்டிய விழாவில், இரட்டையர்கள் ஒரே மாதிரியான ஆடை, அணிகலன்கள் அணிந்து உற்சாகமாகப் பங்கேற்றனர். நைஜீரியாவின் ஓயோ மாநிலத்தில் ஒவ்வொரு 1,000 குழந்தைகளுக்கு 50 ஜோடி குழந்தைகள் இரட்டையர்களாகப் பிறக்கின்றனர்.