கர்நாடகாவைச் சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் உட்பட இரு பெண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 6ஆம் தேதி இரவு நடந்துள்ளது. இரவில் சுற்றிப் பார்க்க வெளியே சென்ற 27 வயது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர் என இரண்டு பெண்களை, மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை தடுக்க முயன்ற ஆண் சுற்றுலாப் பயணியை, குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கின்றனர்.