மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி திட்ட பெண் அலுவலர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. SIR பணிச்சுமை காரணமாக அப்பெண் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், “3 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை இரண்டே மாதங்களில் முடிக்க நிர்பந்திக்கும் செயலை, இன்னும் பல உயிர்கள் போவதற்கு முன் நிறுத்த வேண்டும்” என தேர்தல் ஆணையத்துக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.