நோயாளியிடம் ரூ.300 லஞ்சம் பெற்ற காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உறவினரிடையே ஏற்பட்ட சண்டையில் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் ரூ.300 GPay-இல் லஞ்சமாக பெற்ற காவலர் கல்பனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.