கோவையின் போத்தனூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தவசி மற்றும் சந்தோஷ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது, தவசி தப்பியோட முயன்று பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட தற்காப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் தவசியை காலில் சுட்டு பிடித்தனர். காயமடைந்த பெண் காவல் ஆய்வாளர் மற்றும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த குற்றவாளி ஆகிய இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நன்றி:NewsTamil