பெண் மருத்துவருக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து, பலாத்காரம் செய்த புகைப்படம், வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஆனந்த் கட்டே (23) என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் பழகிய 28 வயது பெண் மருத்துவரை சதாராவில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். அதனை வீடியோ பதிவும் செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதும் போலீஸ் விசாரரணயில் தெரியவந்துள்ளது.