நீட் மறு தேர்வு எழுத அச்சம்.. மாணவி தற்கொலை

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவி அஹன்ஷா (18). இவர் மும்பையில் தங்கி இருந்து நீட் தேர்வுக்கு பயிற்சிப் பெற்று வந்தார். அவர் கடந்த மாதம் 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு எழுதி இருந்தார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துவிடலாம் என கருதினார். ஆனால், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். மறுதேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அச்ச உணர்வில் அஹன்ஷா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி