தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அனல், நீர், கியாஸ், அணுமின் நிலையங்கள், காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தில் மின்சார தேவை அதிகம். மத்திய மின்சாரத் துறை, கோடை வெயில் முன்கூட்டியே தொடங்கியதாலும், தொழில்துறை வளர்ச்சியாலும் மே மாதத்தில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்சார் துறை எச்சரித்துள்ளது.