தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தந்தையர் தினமான இன்று (ஜூன் 15) ஒவ்வொருவரும் தங்களின் தந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அன்புமணி ராமதாஸின் வாழ்த்துப்பதிவில், "தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!" என கூறியுள்ளார்.