இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியின் 'பிதாமகன்’ என்று போற்றப்பட்ட மூத்த பேராசிரியர் வி. ராஜாராமன் (92) காலமானார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி உள்ளிட்டவைகளில் இவர் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். டி.சி.எஸ்ஸின் முதல் சி.இ.ஓ ஃபக்கீர் சந்த் கோஹ்லி மற்றும் இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி ஆகியோர் இவரின் மாணவர்கள் ஆவர். இவரின் சேவையை பாராட்டி மத்திய அரசு 1998ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.