திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை கொலை.. 3 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தில் வீடு புகுந்து மகள் கண்முன்னே செங்கல் சூளை மேஸ்திரியை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில் கொலை செய்தவர்கள், வடகண்டம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா, கண்மணி, மணிகண்டன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில் மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி