மகன் தீக்குளித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி: வேங்கோட்டைச் சேர்ந்தவர் பாலையன் (58). இவரது மனைவி மகேஸ்வரி 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். மகன் சிஜோ என்பவருடன் பாலையன் வசித்து வந்தார். சிஜோ வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஊருக்கு வந்து, அறுவை சிகிச்சை நடந்துள்ளது. கடந்த 24ஆம் தேதி திடீரென தந்தை மகனிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மகன் தனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். இதனால் மனவேதனையடைந்த பாலையன் விஷம் குடித்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி