ராஜஸ்தானில் லாரி மோதி தந்தை, 3 குழந்தைகள் பரிதாப பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாலையோரம் பலூன் வியாபாரம் செய்து வந்த ஒரு குடும்பத்தினர் மீது, அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் சாக்கடைக்குள் தூக்கி வீசப்பட்ட 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த தந்தை சந்திரபிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்தில் படுகாயமடைந்த தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி