ரஷ்யாவின் கெமெரோவோ நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த An-12 ரக விமானம் திடீரெனத் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 17 பேரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடுவானில் தீப்பிடித்த விமானம் எரிந்தபடியே கீழே விழுந்து தரையில் மோதி வெடித்துச் சிதறியது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், விமானம் விழுந்து நொறுங்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.