கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கோட்டிபுரா கேட் அருகே நேற்று (ஜூன் 12) ஆந்திர போக்குவரத்து பேருந்து, லாரி மீது மோதியதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் கேசவ் ரெட்டி (44), துளசி (21), பிரணதி (4) மற்றும் 1 வயது குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோலார்-ஹோசகோட் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.