வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் 'FASTAG' ஸ்டிக்கரை ஒட்டாவிட்டால், இரு மடங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 'FASTAG' ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களால், சுங்கச்சாவடிகளில் தேவையில்லாத கால தாமதம் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள சுமார் ஆயிரம் சுங்கச்சாவடிகளிலும், 'FASTAG' ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு, இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.