பாசிச தவெக அரசு.. திமுக கடும் கண்டனம்

காவிரி பிரச்சினைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில்  தவெக அரசு மீது, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வக்கற்ற தவெக அரசு, பொய்வழக்கு போட்டு தன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது என்று திமுக இளைஞரணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எக்ஸ் பதிவில், நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பப்போகும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமுடியாது என்ற அச்சத்தில் கைது செய்திருக்கும் பாசிச தவெக அரசு என கண்டித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕