வேலூர் மாவட்டம் ஆந்திர எல்லைப் பகுதியான பரதாமியில் மாங்காய் ஏற்றி வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியதை கண்டித்து, மாங்காய்களை தரையில் கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும், டன் ஒன்றுக்கு ரூ.4,000 மானியமாக வழங்க வேண்டும் எனவும், குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.15,000 நிர்ணயித்து வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:சன் நியூஸ்