இந்திய அணி அக்டோபர் மாதம் ODI சுற்றுப் பயணத்திற்காக ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. அப்போது ரோஹித், கோலிக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடத்த ஆஸி., கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வீரர்களும் டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில் ODIல் மட்டும் தொடர்ந்து விளையாட உள்ளனர். ஒருநாள் போட்டிகளிலும் இது அவர்களுக்கு கடைசி ஆஸி., சுற்றுப் பயணமாக இருக்கலாம் என கூறி இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது