சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை கவனிக்காமல் சென்றதற்காக நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், அவசர சூழல் காரணமாகவே அதை கவனிக்க முடியாமல் போயிருக்கும் என்றும், அதற்காக தங்களைத் தலைக்கணம் பிடித்தவர்கள் என்று கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.