புதிய வாக்காளர்கள், சினிமா மோகம் கொண்டவர்கள் விஜய் கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்புள்ளது என்று பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார். விருதுநகர் சிவகாசியில் இன்று (பிப்., 07) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தவெக ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறும். அந்த கட்சி வாங்கும் ஓட்டுகள் நிச்சயமாக திமுக கூட்டணி ஓட்டுக்களாகவே இருக்கும். விஜய் கட்சி சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்பமான தாக்கல் செய்ய சென்றது சினிமா மீது உள்ள ஆர்வக்கோளாரை காட்டுகிறது' என்றார்.
நன்றி: தந்தி டிவி