பிரபல இளம் குத்துச்சண்டை வீரர் காலமானார்

அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல இளம் குத்துச்சண்டை வீரர் பால் மெக்கல்லா ஜூனியர், தனது 25 வயதில் காலமானதாக ஐரிஷ் அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜன., 02) அவரது உயிர் பிரிந்தது. அவர் உல்ஸ்டர் மற்றும் அயர்லாந்து தரப்பில் போட்டிகளில் பங்கேற்று பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது மறைவு சக வீரர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி