புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல தமிழ் நடிகர் 'சூப்பர் குட்' சுப்பிரமணி இன்று (மே.10) காலமானார். தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக பயணத்தை தொடங்கி பின்னாளில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் 'சூப்பர் குட்' சுப்பிரமணி. இவர் பிசாசு, ரஜினி முருகன், காலா, ஜெய்பீம், பரியேறும் பெருமாள் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.