25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்து வரும் நேத்ரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது மூத்த மகள் அபிநயா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மீண்டும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பா நலம் பெற அனைவரும் பிராத்தனை செய்யுங்கள்" என்று கூறியுள்ளார். நேத்ரனுக்கு தீபா என்ற காதல் மனைவியும், இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.