கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல மாடல் சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்றுவந்த சான் ரேச்சல், கடந்த மாதம் 5ம் தேதி காராமணிகுப்பத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சான் ரேச்சல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.