'2 பாயிண்ட் 4 சில்ட்ரன்' என்ற பிரபல தொடர் மற்றும் 'அன் ஆஃபுல்லி பிக் அட்வென்ச்சர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஜார்ஜினா கேட்ஸ் (51) காலமானார். இவரின் மறைவு செய்தியை அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவுடன் உறுதிப்படுத்தியுள்ளார். 1990-களில் தொலைக்காட்சியில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி, ஹக் கிராண்ட் மற்றும் ஜோவாகின் ஃபீனிக்ஸ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.