மூத்த ஹாலிவுட் நடிகரும், ஆஸ்கார் விருது பெற்றவருமான ராபர்ட் டுவால் தனது 95 வயதில் நேற்று (பிப்., 16) காலமானார். இதனை அவரது மனைவி லூசியானா டுவால் அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 'தி காட்பாதர்', 'அபோகாலிப்ஸ் நவ்' போன்ற பல புகழ்பெற்ற படங்களில் நடித்த ராபர்ட் டுவால், 'டெண்டர் மெர்சீஸ்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். சர்வதேசத் திரையுலகிற்கு அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும்.