பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் (67), தனது வீட்டில் காலமானார். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிஃப் காவல் துறை, அவரது மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று உறுதி செய்துள்ளது. மேலும், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்கேல் மேட்சனின் மரணம் ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1992ல் வெளியான இயக்குநர் க்வென்டின் டரான்டினோவின் 'ரிசர்வொயர் டாக்ஸ்' என்ற திரைப்படம் மூலம் மைக்கேல் மேட்சன் உலகப் புகழ் பெற்றார்.