பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போர்ட்டர் காலமானார்

'வெண்டெல் ஸ்காட்: ஏ ரேஸ் ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான சார்லஸ் எஃப். போர்ட்டர் (47) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், கடந்த நவ.2-ம் தேதி உயிரிழந்ததாக அவரது மனைவி கேண்டிஸ் டாப்-போர்ட்டர் சமூக வலைதள பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். 18 ஆண்டுகள் தங்களின் திருமண வாழ்க்கையில் கணவரின் நேர்மை, சகிப்புத்தன்மை மற்றும் வாழ்வின் மீதான அர்ப்பணிப்பு குறித்தும் அவர் உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕