பிரபல சமையல் கலை நிபுணரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவருமான 'ஷெஃப்' தாமு (72) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சமையல் துறையில் கின்னஸ் சாதனை படைத்ததுடன், பத்மஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற இவரின் மறைவு செய்தி சமையல் கலை உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நன்றி:தந்தி