'வானவில்', 'கோவை பிரதர்ஸ்' உட்பட 30-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகை உமா சங்கரி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தனக்கு 2-ம் நிலை கீமோதெரபி சிகிச்சை நடந்து வருவதாகவும், ஒவ்வொரு நாளையும் மிகுந்த சிரமத்துடனேயே கடந்து வருவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். உயிருக்கு போராடி வரும் அவரது இந்த பதிவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.