பிரபல பிரெஞ்சுத் திரைப்பட நடிகையான Nathalie Baye (77), லூயி பாடி டிமென்ஷியா என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுப் பாரிஸில் காலமானார். சுமார் 80 படங்களில் நடித்துள்ள இவர், பிரான்சின் உயரிய திரைப்பட விருதான 'சீசர் விருதை' 4 முறை (1981-83 வரை தொடர்ந்து 3 முறை) வென்று சாதனை படைத்துள்ளார். பல ஆண்டுகளாகப் பிரெஞ்சு சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த இவர், பிற்காலத்தில் சர்வதேச அளவிலும் புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.