பிரபல நடிகருக்கு உடல்நலக்குறைவு.. 30 நாட்கள் ஓய்வு

பிரபல மலையாள நடிகரும், வழக்கறிஞருமான ஷுகூர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று (பிப்., 07) தகவல் வெளியானது. இரத்த அழுத்தம் தொடர்பான உடல் ரீதியான அசௌகரியத்தை அனுபவித்து வருவதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஷுக்கூர் தற்போது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 30 நாட்கள் முழு ஓய்வில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் குஞ்சாக்கோ போபன், தமிழ் நடிகை காயத்ரி நடிப்பில் வெளியான ‘ன்னா தான் கேஸ் கொடு’ படத்தின் மூலம் ஷுகூர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி