2026 தமிழக சட்டமன்றத் தேர்தலி வாக்களிப்பதற்காகவே சிங்கப்பூரில் இருந்து இன்று (ஏப்.23) சென்னை பெரம்பூருக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திருமபினர். சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது தங்களது பெயர்களை சேர்த்திருந்த போதிலும், தற்போது பெயர் நீக்கப்பட்டிருப்பதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நீண்ட தூரம் பயணம் செய்து ஜனநாயக கடமையாற்ற வந்த தங்களுக்கு, உரிய வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நன்றி:BBC