18 பேர் உயிரிழந்த ஆலைக்கு சீல்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்த செயின் பீட்டர் பால் இறால் பதப்படுத்தும் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கடந்த ஜூன் 21 அன்று நடைபெற்ற அமோனியா வாயு கசிவு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களாக அமோனியா வாயு கழிவுகளை வெளியேற்றும் பணி நடைபெற்ற நிலையில், தற்போது ஆலை மூடப்பட்டுள்ளது. அதே போல் ஊழியர்கள் தங்கியிருந்த பகுதிகளும் சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி