உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டம் பிப்ரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 24 பேர் படுகாயமடைந்தனர். விபத்தின்போது 40-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 15 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.