தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டமானது அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (பிப்.9) நடைபெறும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 24 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள் மற்றும் 480 பேரூராட்சிகளில் பணியாற்றும் சுமார் 1.50 லட்சம் பணியாளர்கள் நாளை முதல் இத்திட்டத்தில் பயனடைவர்.