காதலர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு கலால்துறை கடும் எச்சரிக்கை

புதுச்சேரியில் காதலர் தினத்தை முன்னிட்டு "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்" என ஆஃபர் அறிவித்த தனியார் மதுபான கடைகளுக்கு கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலால்துறை, மதுபானங்களை ஆஃபர் விலையில் விற்பனை செய்வது விதிமீறல் என்று கூறி அந்த சலுகைகளை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிட்டார். மேலும், விதிமீறலில் ஈடுபடும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி