இலங்கை: யாழ்ப்பாணம் செம்மணியில் மனித புதைக்குழிகள் இருப்பதாக கடந்த 1998-ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர் ஒருவர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், செம்மணி அருகே மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதை யாழ்ப்பாண நீதிமன்ற உத்தரவின்படி அந்த பகுதியில் அகழாய்வு பணி நடந்தது. இதில் 65 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு மேலும் பல மனித எலும்பு கூடுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.