எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது குறித்து கடந்த மாதம் 17-ம் தேதி சத்யபாமா, மரகதம் குமரவேல் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரும் இன்று மீண்டும் சபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ளனர். ஏற்கெனவே அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
நன்றி: நியூஸ் 18