டீ vs காபி: எலும்பு வலிமைக்கு எது சிறந்தது?

காபியை விட தேநீர் அருந்துவதே எலும்பு ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும் அதே வேளையில், காபியில் உள்ள 'கஃபைன்' உடலில் கால்சியம் சேர்வதை தடுத்து எலும்பு தேய்மானத்திற்கு வழிவகுக்கும். ஒரு நாளைக்கு இரண்டு கோப்பைகளுக்கு மேல் காபி குடிப்பவர்கள், போதிய கால்சியம் உணவுகளை சேர்த்துக் கொள்வது எலும்பு முறிவு அபாயத்தை குறைக்க உதவும்.

தொடர்புடைய செய்தி