"பாஜகவில் இருப்பவர்களும் திமுகவை பாராட்டுகின்றனர்” - முதலமைச்சர் ஸ்டாலின்

சட்டப்பேரவை தேர்தலில் திமுக சிறப்பான வெற்றியை பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “50% தேர்தல் பணிகளை மட்டுமே திமுக நிலுவையில் வைத்துள்ளது. களத்தை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி திமுக வெல்லும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது” என்றார். மேலும், “பாஜகவில் இருப்பவர்கள் கூட திமுகவினரை போல யாரும் வேலை செய்ய முடியாது எனக் கூறுகின்றனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி