சென்னை: பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. “நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அதனைக் கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியைத் தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது. கை ரிக்ஷாவை ஒழித்ததுபோல, சாதி ஒழிப்பு விஷயத்திலும் இந்த அரசு வரலாறு படைக்க வேண்டும்” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.